திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்கள் வரியாக செலுத்திய பணத்தில் சுமார் ரூ.2.50 கோடி வரை மோசடி நடந்திருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வருகிறது கடந்த 4 மாதங்களில் இந்த முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. பல்வேறு தலைப்புகளில் கண்காணிப்பாளர் பட்டியலிட்ட வரிப்பணத்தை திருத்தம் செய்த கருவூலர் தானே உருவாக்கிய பட்டியலின்படி வங்கியில் பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் செலுத்தியதற்காக வங்கியில் இருந்து வழங்கப்பட்ட ரசீதை மாற்றி கண்காணிப்பாளர் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்ப புதிய ரசிகை தயார் செய்து சமர்ப்பித்து வந்துள்ளார். இதே போல் வங்கி பண பரிமாற்ற அறிக்கையும் மோசடியாக மாற்றி ரூ.2.50 கோடி வரை பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது -:
தற்போது வசூலிக்கப்பட்ட வரிப்பணம் முறையாக வங்கியில் செலுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டிருக்கிறது வங்கியில் இருந்து தரப்படும் பண பரிவர்த்தனை அறிக்கையும் மாற்றப்பட்டு இருக்கிறது போலியான முத்திரை, கையொப்பம் என இந்த விவகாரத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன இதுகுறித்து மாவட்ட எஸ்பி-யிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
புகார் குறித்து மாவட்ட எஸ்பி.பிரதீப் கூறியதாவது
மாநகராட்சி கணக்காளர் பணம் கையாடல் செய்தது குறித்து ஆணையர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது எனினும் நிதி முறைகேடு தணிக்கை தொடர்பான அறிக்கை மாநகராட்சி தரப்பில் வழங்கப்பட்டவுடன் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்