திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக சுற்றுலா வாகனங்கள் வந்தது. இதனால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன
பிரையண்ட் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்திருந்தனர். மேல்மலை பகுதியான மன்னவனூருக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு எழும்பள்ளம் ஏரியில் பரிசல் சவாரியும் மேல்பரப்பில் ஜிப்லைன் உள்ளிட்ட சாகச பயணங்களிலும் ஈடுபட்டனர்