குஜராத் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானாவில் அசைவ உணவுகள் விற்பனை செய்திடவும் சாப்பிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விலங்கள்/ பறவைகள் வதைக்கும் தடை விதிக்கப்பட் டுள்ளது.
உலகில் அசைவ உணவு விற்பதற்கு சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்படிருக்கும் முதல் நகரம் பாலிதானாவாகும்.
பாலிதானா ஜைன மதத்தினர் மிகவும் போற்றி மதிக்கும் புனித நகராகும். இங்குள்ள மலையின் மேல் 900 ஜைன ஆலயங்கள் உள்ளன. ஆயிரக்கணக்கான ஜைனர்கள் இந்நகருக்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.