அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த பயணி சுற்றுலாப் பயணிகள் விசாவில் மலேசியா செல்வதற்காக வந்துள்ளார். அவரிடம் இருந்த உடமைகளை அதிகாரிகள் பரிசோதனை செய்த போது இரண்டு அட்டை பெட்டிகள் சந்தேகத்திற்கிடமாக இருந்துள்ளது.
இது குறித்து கேட்டதற்கு சமையலுக்கு தேவையான அரசி பருப்பு வகைகள் என பயணி தெரிவித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் சந்தேகமடைந்து அட்டை பெட்டிகளை திறந்து பார்த்துள்ளனர். அதில் உயிருடன் 160 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
நட்சத்திர ஆமைகள் கடத்தலை கண்டுபிடித்த அதிகாரிகள் இரண்டு அட்டை பெட்டிகளில் இருந்த நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் நட்சத்திர ஆமைகளை எடுத்துச் சென்ற பயணியின் மலேசியா பயணத்தையும் சுங்க அதிகாரிகள் ரத்து செய்தனர்.இது தொடர்பான விசாரணையில் இந்த நட்சத்திர ஆமைகள் ஆந்திரா சதுப்பு நிலப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் இந்த நட்சத்திர ஆமைகளுக்கு இங்கு ரூ. 50 முதல் 100 வரையில் விலை ஆனால் மலேசியாவில் 5000 வரை விலை கொடுத்து வாங்குவார்கள் என தெரியவந்துள்ளது. இ
இதனை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் பரி முதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த நட்சத்திர ஆமைகள் கடத்தலில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்