பள்ளி வாகனம் ஓட்டும்போது மாரடைப்பு ஏற்பட்ட சூழலில் வேனை, சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர் மலையப்பன், நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த மலையப்பனுக்கு பள்ளி வாகனம் ஓட்டும்போது நெஞ்சு வலி.
மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டேரிங்கில் மயங்கி சரிந்த மலையப்பன்.
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மலையப்பன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள்.