அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலைக் கல்லூரி தேசிய மாணவர் படையின் சார்பாக கார்கில் விஜய் டிவாஸ் என்னும் தலைப்பில் கார்கில் போரில் வெற்றி பெற்று 25 ஆம் ஆண்டு கொண்டாட்ட விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி முதல்வர் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் மதுரை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் இருந்து வருகை புரிந்திருந்த மேஜர் மஞ்சு அவர்கள் மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார்.
மேலும் திரு முருகேசன் அவர்கள் முன்னாள் ராணுவ அதிகாரி, மாணவிகளிடம் கார்கில் போர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். விழாவிற்கு உரிய ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர் .ரா. கலையரசி சிறப்பாக செய்திருந்தார்.
மாணவிகள் கார்கில் போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக மரக்கன்றுகளை வளர்க்க உறுதிமொழி ஏற்றனர் . மேலும் நாட்டுபற்றினை வளர்க்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டினார். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய மாணவர்படை மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் கல்லூரியின் சார்பாக வழங்கப்பட்டது .