கோக்கு மாக்கு
Trending

ஸ்லீப்பர் கோச் பஸ்ஸில்.. அதுவும் கடைசி சீட்டில்.. வாயில் போர்வையை திணித்த டிரைவர்.. 100-க்கு பறந்த போன் ஹைதராபாத்தில் நடந்த சம்பவம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ளது பாமுரு.. இந்த பாமுருவுக்கு தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலிலிருந்து, ஐதராபாத் வழியாக பஸ் ஒன்று, கடந்த திங்கட்கிழமை இரவு கிளம்பியது.

ஹரிகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த பஸ்ஸில் மொத்தம் 35 பயணிகள் இருந்தார்கள்.. பஸ்ஸில் சித்தையா மற்றும் கிருஷ்ணா என்ற 2 டிரைவர்கள் இருந்தனர். இதில் கிருஷ்ணாவுக்கு 40 வயதாகிறது. நிர்மலிலிருந்தே சித்தையா பஸ்ஸை ஓட்டிக் கொண்டு வந்தார்.. அப்போது பஸ் ஸ்டாண்டில் 27 வயது பெண் ஒருவர், தன்னுடைய 7 வயது மகளுடன் ஏறினார்.. டிரைவர் சித்தையா பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டிருந்த இன்னொரு டிரைவரான கிருஷ்ணா, இந்த பெண்ணை கவனித்தார்.. பஸ்ஸில் ஏறியதுமே அந்த பெண் ஒரேஒரு டிக்கெட் வாங்கி கொண்டு உட்கார்ந்துவிட்டார்.. ஆனால், 7 வயது மகளுக்கு டிக்கெட் எடுக்கவில்லை.. இதையும் கிருஷ்ணா கவனித்தார். கடைசி சீட்: அதனால், அந்த பெண்ணிடம் சென்று, பஸ்ஸுக்கு நடுவில் சீட்டில் குழந்தையை படுக்க வைத்தால் சிக்கலாகிவிடும்.. அதனால், பஸ்ஸுக்கு பின்னாடி கடைசி சீட்டில் சீலிப்பர் கோச்சில் குழந்தையை படுக்க வைத்தால் சிக்கல் இருக்காது என்றார்.. அதன்படியே, குழந்தையுடன் பஸ்ஸின் கடைசி சீட்டில் அந்த பெண் படுத்து தூங்கிவிட்டார்.

ஐதராபாத் அருகில் நள்ளிரவு 12:15 மணிக்கு பஸ் வந்தபோது, எல்லாருமே தூங்கிவிட்டனர்.. அப்போது கிருஷ்ணா, பின்னாடி ஸ்லீப்பர் கோச்சுக்கு சென்று, மகளுடன் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியில் அலறி எழுந்தார்.. ஆனால், அதற்குள் அந்த பெண்ணின் வாயில் போர்வையை திணித்து, பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் கிருஷ்ணா.. பிறகு, கொஞ்ச நேரத்தில், பஸ் ஓட்டிக்கொண்டிருந்த டிரைவர் சித்தையாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டார்.. பஸ் நம்பர்: அதிர்ச்சியிலிருந்து மீண்ட அந்த பெண்ணோ, உடனடியாக 100க்கு போன் செய்து போலீசாரிடம் விஷயத்தை சொன்னார்.. ஐதராபாத் தாண்டி பஸ் வந்து கொண்டிருப்பதையும், பஸ் நம்பரையும் போலீசாரிடம் சொன்னார். இதையடுத்து, பஸ் ரூட்டை கண்டுபிடித்த போலீசார், தர்நாகா மெட்ரோ ரயில் ஸ்டேஷன் அருகே மடக்கி பிடித்துவிட்டார்கள்.. ஆனால், அதற்குள் டிரைவர் கிருஷ்ணா பஸ்ஸிருந்து எகிறி குதித்து தப்பித்து சென்றுவிட்டாராம்.. இதையடுத்து, டிரைவர் சித்தய்யாவை கைது செய்த போலீசார் பஸ்ஸையும் பறிமுதல் செய்தனர்.

மெடிக்கல் செக்கப்: இந்த சம்பவம் தொடர்பாக உஸ்மானியா பல்கலைகழக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.. மருத்துவ பரிசோதனையும் அந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.. பின்னர், தப்பியோடிய கிருஷ்ணாவை பிடிக்க, தனிப்படையும் அமைக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஓடும் பஸ்ஸில் மற்ற பயணிகள் இருந்தபோதும், தன்னுடைய வாயில் போர்வையை திணித்துவிட்டு, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் போலீஸில் வாக்குமூலம் தந்துள்ளார்.. ஓடும் பஸ்ஸிலேயே பலாத்காரம் செய்த இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது… டிரைவர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடக்கிறது. ஹைதராபாத் புறநகரான மெட்டுகடா என்ற பகுதியில் டிரைவர் தப்பியிருக்கிறார்.. இவர் தப்பி செல்ல வேண்டும் என்பதற்காகவே, மற்றொரு டிரைவர் கிருஷ்ணா பஸ்ஸை மெதுவாக இயக்கினாராம்..

கூட்டு பலாத்காரம்: இந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்ட அதே தினத்தில்தான், ஹைதராபாத்தில் 24 வயது பெண் சாப்ட்வேர் என்ஜினியர் வட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.. தனக்கு புதிதாக வேலை கிடைத்ததை கொண்டாடுவதற்காக வனத்லிபுரம் பகுதியில் மதுபானக்கூடம் கொண்ட ஓட்டலுக்கு தன்னுடைய ஆண் நண்பர் உட்பட 2 பேரை அழைத்து சென்றிருக்கிறார். அப்போது அந்த பெண் மதுபோதையில் இருந்தபோது, ஆண் நண்பர்கள் 2 பேருமே அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.. பிறகு தப்பியோடிய அவர்களை போலீசார் தேடிக் கொண்டுமிருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், ஓடும் பஸ்ஸில் மற்றொரு பெண்ணும் சீரழிக்கப்பட்டுள்ளது, மிகப்பெரிய அதிர்வலையை தெலுங்கானாவில் ஏற்படுத்தி வருகிறது. இது பயணிகளிடையே கடுமையான அதிர்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button