கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்ததால் பல உயிர்கள் போனது இதனால் தமிழகம் முழுவதும் கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை பகுதியில் பாருடன் இணைந்த அரசு மதுபான கடை இயங்கி வருகிறது . இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு பாரில் கடை திறந்தவுடன் விற்பனை செய்வதற்கு தேவையான பொருட்களை பார் ஊழியர்கள் தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த திண்டுக்கல் மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் முத்து குமார் தலைமையில் காவலர் ஜேம்ஸ் உட்பட்ட காவல்துறையினர் பாரில் முந்தைய நாள் விற்பனை செய்து வைத்திருந்த பணம் சுமார் 40 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டதாகவும் அங்கு பணியில் இருந்த பணியாளரின் டவுசரில் வைத்திருந்த அவரது சம்பள பணம் ரூபாய் 400 – யும் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது . இதற்கான சிசிடிவி வீடியோ ஆதாரங்களை அந்த பார் உரிமையாளர் தற்போது வெளியிட்டுள்ளார் .
மேலும் வந்திருந்த திண்டுக்கல் மதுவிலக்கு காவலர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தனது சம்பள பணத்தை திருப்பி தருமாறு கூறிய பார் ஊழியரை தகாத வார்த்தையால் திட்டி தாக்க வந்ததாகவும் கூறப்படுகின்றது. மேலும் திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறையினர் நடவடிக்கை என்ற பெயரில் இது போன்ற முறைகேடான காவல்துறையின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவது போன்ற அநாகரிகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை பார் உரிமையாளர் விடுத்துள்ளார்.