விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபரை பிடித்த சார்பு ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு காவலரை வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டி வருகிறார்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் வேடசந்தூர் குற்றப்பிரிவு காவலர் பாஸ்கர் அலெக்ஸாண்டர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் திருப்பூர் கோயமுத்தூர் மாவட்டங்களில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது அவரிடம் விசாரணை நடத்தியதில் நத்தம் கோட்டையூரைச் சேர்ந்த செல்வகுமார் என்பதும் அவரிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் சிறப்பாக செயல்பட்ட சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் குற்றப்பிரிவு காவலர் பாஸ்கர் அலெக்சாண்டரை வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி வெகுவாக பாராட்டி வருகிறார்