வேளாங்கண்ணி கோயில் திருவிழாவையொட்டி அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு சிறப்பு ரயில் சேவையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
வேளாங்கண்ணி கொடியேற்றம்.
வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்வாக கொடியேற்றம் இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவார்கள்.
பாந்திரா to வேளாங்கண்ணி
பாந்திரா ரயில் நிலையத்தில் ( ரயில் எண் 09093 ) 27ஆம் தேதி இரவு 9 மணி 55 நிமிடங்களுக்கு புறப்படும் ரயிலானது பூனே, ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை வந்தடைகிறது.
இதே போல வேளாங்கண்ணியில் (ரயில் எண் 09094) இருந்து ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியும் செப்டம்பர் மாதம் 9 தேதியும் ரயில் இயக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 29ஆம் தேதி மதியம் 1 .55மணி அளவில் வேளாங்கண்ணியில் இருந்து ரயில் புறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு நாளை தொடங்குகிறது
இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு ஏசி ஒரு பெட்டியும், மூன்றாம் வகுப்பு ஏசி 10 பெட்டிகளும், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஏழும், முன்பதிவு செய்யப்படாத பெட்டி இரண்டும் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.