
விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததாலும், பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதாலும் மாணவர்கள் மரத்தடியில் தார்ப்பாய் விரித்து கல்வி பயிலும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குண்டலிப்புலியூரில் இயங்கி வரும் இந்த அரசு உயர் நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்திலேயே ஆரம்பப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி கடந்த 2017-ல் நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது ஆரம்பப் பள்ளி செயல்பட்ட இடத்திலிருந்த பழமையான கட்டடம் அகற்றப்பட்டதால் போதிய வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அருகில் உள்ள மழைநீர் வடிகால்கள் சீரமைக்கப்படாததால், மழைநீர் பள்ளி வளாகத்தில் தேங்கும் சூழல் உள்ளது