திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயரின சரணாலய எல்லைக்கு உட்பட்ட மன்னவனூர் பகுதியில் யானை தந்தம் பறிமுதல் .
மதுரையில் இருந்து வந்த வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினர் இணைந்து கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கீழான வயலை சேர்ந்த சந்திரசேகர், பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன், பொன்வண்ணன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த யானை தந்தத்தை பறிமுதல் செய்து மன்னவனூர் அருகே உள்ள வனத்துறை சொந்தமான இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் .