திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரண்டு மாதத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவர்களை கைது செய்த வன குற்ற தடுப்பு பிரிவு
என்ன நடக்கிறது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். யானை தந்தம் இவர்களுக்கு எப்படி கிடைக்கிறது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இதுபோன்று எவ்வளவு பேர் யானை தந்தம் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்
ஏற்கனவே ஜுன் 15-ம் தேதி மதுரையிலிருந்து வந்த இதே வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினர் திண்டுக்கல் வனக்கோட்டம் கன்னிவாடி வனச்சரக எல்லைக்குள் யானை தந்தங்கள் விற்க முயன்ற கும்பலை சேர்ந்த 7 நபர்களை (3 பெண்கள் உட்பட) பிடித்து அவர்களது தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் வன உயிரின சரணாலய எல்லைக்குட்பட்ட பழனி வனச்சரக பகுதியில் இறந்த நிலையில் யானையின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் சிலரை பிடித்தனர். பின்னர் பழனியில் வைத்து யானை தந்தங்களுடன் பிடித்ததாக 3 நபர்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டு பழனி வனச்சரகர் கோகுல கண்ணன் உட்பட சிலருக்கு 17- B மொமோ கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கொடைக்கானல் மலை பகுதியில் ஒற்றை யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 3 நபர்கள் பிடிபட்டுள்ளனர் . திண்டுக்கல் வனக்கோட்ட வனச்சரகங்கள் கன்னிவாடி , ஒட்டன்சத்திரம் கொடைக்கானல் வன உயிரின சரணாலயம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான யானைகள் வசித்து வரும் நிலையில் சமீபகாலமாக யானை தந்தங்கள் பிடிபட்டு வருவதை பார்த்தால் யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு உள்ளனரா எனபதனை வனத்துறையினர் விளக்கம் அளிக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர் .
மேலும் இதே நிலை நீடித்தால் வன உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது என்றும் மத்திய மாநில வனத்துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வன உயிரினங்களை காப்பாற்ற வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை