கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியில் வந்த ஜெனி ஆத்மிக் என்பவரை காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையி்ல் கடந்த 10 நாட்களில் இதுவரை 3 பேரை காட்டெருமைகள் தாக்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தொடர்ந்து பல பகுதிகளை விட்டு உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் கொடைக்கானலில் வீதியில் காட்டு மாடு உலா வருகிறது
நகர் பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தாலும் வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்கு எந்த முயற்சியும் எடுப்பது இல்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது