திண்டுக்கல் தவசிமடையை சேர்ந்த சவேரியார்(65) இவருக்கு சொந்தமான சிறுமலை, தாளக்கடை பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் இரவு தாளக்கடை பகுதியை சேர்ந்த சங்கர் மகன் வெள்ளையன்(18) என்பவர் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது
இதில் ஆத்திரம் அடைந்த சவேரியார் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை வைத்து வெள்ளையனை சுட்டார் இதில் தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு இன்று சிறுமலை பகுதியில் பதுங்கியிருந்த சவேரியாரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து அவரிடமிருந்து கள்ளத் துப்பாக்கியை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்