குன்னூா் ஓட்டுபட்டறைப் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (55). இவா் அப்பகுதியில் காய்கறிக் கடை நடத்தி வந்தாா். இவரது கடைக்கு தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி அடிக்கடி வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளாா். அப்போது முருகேசன் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி வீட்டில் புலம்பியபடியே இருந்துள்ளாா் பெற்றோா் விசாரித்தபோது விவரத்தை சொல்லி உள்ளாா். இதனைத் தொடா்ந்து குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா் இது தொடா்பாக விசாரணை நடத்திய போலிசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.