தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுக்கா அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட 9 கிராம மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானதாகும். வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுப்பதாகக் கூறி, மக்களை பணம் கொடுத்து அழைத்துச் சென்று, டாஸ்மாக் கடை கோரும் மனுவை ஏமாற்றி கொடுக்க வைத்துள்ளனர். இது கண்டனத்துக்குரிய செயல்.
தருமபுரி மாவட்டத்தில் ‘சந்து கடை’ என்கிற பெயரில் ஏராளமாக நடந்துவரும் சட்டவிரோத சாராயக் கடைகளைத் தான் மக்கள் எதிர்க்கிறார்கள். டாஸ்மாக் கடைகளை திறக்குமாறு யாரும் கேட்கவில்லை.