தேனி மாவட்ட போலீசாருக்கு சென்னை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் புகார் மனு புகார் மனு அளித்திருந்தார் அதில் 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாகவும், அதாவது ஒரு லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாகவும். அந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தன்னிடம் ஒரு கும்பல் 10 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் தேனி போலீஸார் விசாரித்து வந்தனர். மேலும் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதாக சந்தேகத்தின் அடிப்படையில் தேனி கருவேல்நாயக்கன் பட்டியைச் சேர்ந்த சேகர் (45) மற்றும் பொம்மையகவுன்டன்பட்டியைச் சேர்ந்த கேசவன் ஆகியோரை காவல்துறையினர் கண்காணித்து வந்தநிலையில் அவர்களிடம் கள்ளநோட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து சேகரை பிடித்து விசாரித்தபோது அவருடன் கேசவனும் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் போலி இரண்டாயிரம் நோட்டுகளை வைத்து பண மோசடி செய்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள சேகரின் வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டதில் 14 லட்சம் ரூபாய் அசல் பணம் கைபற்றப்பட்டுள்ளது. மேலும் புழகத்தில் விடுவதற்காக வைத்திருந்த 3 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டு, அவர் பயன்படுத்திய 16 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.