தமிழக வனத்துறையின் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு (மதுரை மண்டலம்) கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானல் மலை பகுதியில் ஒரு யானைத்தந்தம் பறிமுதல் செய்து பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில் திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகில் உள்ள சிலரிடம் இதன் மற்றொரு தந்தம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்மந்தபட்ட நபர்களை தொடர்பு கொண்ட வனத்துறை அதிகாரிகள் அவர்களை தொடர்பு கொண்டு வியாபாரிகள் போல பேசியுள்ளனர் .
யானை தந்தத்தை காட்ட உடுமலை அருகே சின்னாறு பகுதிக்கு அழைத்து சென்ற நபர்கள் அலைக்கழித்ததாகவும் அதனால் அவர்களிடம் விசாரணை செய்யும் பொருட்டு யானை தந்தம் காட்டுவதாக அழைத்து சென்ற இரண்டு நபர்களையும் ஜீப்பில் ஏற்றி அழைத்து வந்த நிலையில் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல்.
பதினைத்திற்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்தில் இருந்தும் குற்றவாளி எப்படி தப்பி ஓடி இருக்க முடியும் என வன ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்
இதே மதுரை மண்டல வன உயிரின குற்ற தடுப்ப பிரிவினர் (தமிழக வனத்துறை ) கடந்த ஜூன் 15-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே யானை தந்தங்கள் விற்க முயன்ற கும்பலை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பிடித்து பின்னர் பழனி வனச்சரக அலுவலகத்தில் மூன்று நபர்களை மட்டும் ஒப்படைத்தனர் என்றும் பழனியில் இருந்து யானை தந்தங்களை கன்னிவாடி வரை கடத்தி வந்த மூன்று பெண்கள் உட்பட யானைதந்தகள் விற்பனையின் போது பிடிபட்ட பலரை ஏன் விடுவித்தனர் என்றும் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றால் அவர்களை ஏன் இரண்டு நாட்களாக கன்னிவாடி வனச்சரக வளாகத்தில் வைத்திருந்து பழனிக்கு அழைத்து சென்று விடுவித்தனர் என்றும் பல்வேறு விமர்சனத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடதக்கது . ம
இந்த மதுரை மண்டல வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினரின் சமீபத்திய வழக்குகள் குறித்து மத்திய மாநில வனத்துறையின் விஜிலைன்ஸ் பிரிவினர் உரிய விசாரணை நடத்தினால் மிகப்பெரிய தவறுகள் கண்டுபிடிக்கப்படலாம் என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்