தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 55 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த அறநிலையத் துறைக்கு வல்லுநர் குழுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மண்டல அளவிலான வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் அன்பு மணி தலைமையில் நடைபெற்றது. இதில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்த தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 55 திருக்கோயில்களுக்கு திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அனுமதி வரப்பெற்றவுடன் திருப்பணி செய்து குடமுழுக்க நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கலந்து தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சார்ந்த செயல்அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.