
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் மேல்மலை பகுதியில் உள்ள பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட போளூர் கிராமத்தில் பரமேஸ்வரன் விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுப்பன்றி விவசாயம் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராகி வரும் உருளைக்கிழங்கு பயிர் சாகுபடி செய்திருந்த நிலையில் காட்டுப்பன்றி பயிர்களை சேதப்படுத்தியது தொடர்ந்து கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் தினம் தோறும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்