நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் உள்ள அந்தியூர் அருகே காட்டு யானை ஒன்று இறந்து சிலநாட்கள் ஆன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இறந்த இந்த யானை நீண்ட தந்தங்களை உடைய ஆண் யானையாகும் . சமீப காலமாக தமிழகம் மட்டுமின்ற கர்நாடகா , கேரளா மாநிலங்களிலும் அதிகளவில் யானை தந்த கடத்தல் கும்பல்கள் பிடிபட்டுள்ளனர் . இவர்களின் முக்கிய தலமாக தமிழகம் / தமிழக வனப்பகுதி இருப்பதாக கூறப்படுகிறது .
தமிழகத்தை பொருத்தவரையில் சத்தியமங்களம் புலிகள் காப்பகம் , நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் , ஶ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் , களக்காடு முண்டாந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் அதிக யானைகள் வாழும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன .
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் பிடிபடும் யானை தந்தங்களிலும் மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு புலிகள் காப்பக பகுதி அல்லது அதன் அருகில் உள்ள பகுதியை சேர்ந்த நபர்கள் குற்றச் சம்பவங்களின் தொடர்பில் வருகின்றனர் .
தமிழக வனத்துறையில் பல்வேறு பிரிவுகள் பிரிவுகள் உள்ளன . வனச்சரகம் , வன உயிரின சரகம் , வனப்பாதுகாப்பு படை , வன உயிரின குற்ற தடுப்பு பிரிவு , எலைட் பிரிவு இவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனரா என கண்காணிக்க மாநில அளவிலான நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு என தமிழக காவல் துறைக்கு சற்றும் குறைவில்லாத அளவில் வனத்துறைக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் உள்ளன .
இவ்வளவு கட்டமைப்புகள் உள்ள நிலையில் சிறப்பு நிலை வனப்பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ள புலிகள் காப்பகம் , வன உயிரின சரணாலயம் , பல்லுயிர் காப்பகம் மற்றும் இது போன்ற பலதரப்பட்ட பகுதிகளிலும் தமிழக காவல் துறைக்கு கூட இல்லாத தனிப்பட்ட சில அதிகாரங்களின் அடிப்படையில் வேட்டை தடுப்பு காவலர்களை நியமித்துக் கொள்ள அதிகாரம் வழக்கப்பட்டு வனப்பாதுகாப்புக்கு என ஆண்டுக்கு பலநூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் மத்திய மாநில அரசுகள் ஒதுக்குகின்றன .
இது மட்டுமல்லாது தமிழக வனப்பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வனவாழ் மக்களுடன் இணைந்து வனக்குழு , சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு போன்று பல குழுக்கள் அடைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளிடம் பல்வேறு நுழைவு கட்டணங்கள் வசூலித்து வனப்பகுதியில் கட்டமைப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்திட சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது .
எந்து அமலாக்க துறைக்கும் இல்லாத நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்பு அதிகாரங்கள் உள்ள துறையாக இருந்தாலும் தமிழுக வனத்துறை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது முறையாக நிதியை பயன்படுத்தாததும் பணியில் சுணக்கம் மற்றும் தங்களுக்குள் இருக்கும் அதிகார போட்டி , பல்வேறு பிரிவுகள் உள்ள நிலையில் அவர்களுக்குள் உள்ள ஈகோ , கள பணியாளர்களை அதிகாரிகள் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துதல் , தற்காக பணியாளர்களை ஓட்டுநர்களாக மாற்றி அதிகாரிகள் வைத்துக் கொள்வது மற்றும் பல்வேறு மறைமுக காரணங்களால் குறைந்து போன ரோந்து பணி , இரசிய தகவல் சேகரிப்பு பணிகள் , ஒருங்கிணைந்த குற்ற கண்காணிப்பு , மாநில அளவிலான நுண்ணறிவு மற்றும் குற்றபுலணாய்வு பிரிவின் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் பெரும் பாதிப்பு வனம் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ளது என வன ஆர்வலர்கள் கூறுகின்றனர் .
தமிழக வனப்பரப்பில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வனக் கொள்ளை என சமூக ஆர்வலர்களால் கூறப்படும் மரக்கடத்தல் , நில ஆக்கிரமிப்பு , வன விலங்குகளின் வழித்தடத்தில் அனுமதியற்ற கட்டுமானம் , பல்வேறு மலை பகுதிகளில் அனுமதிக்கப்படாத JCB , கிடாச்சி , போர்வெல் இயந்திர பயன்பாடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது
இதனால் வாழ்விடங்களை இழந்த வன உயிரினங்கள் வனக் குற்றவாளிகளின் இலக்காக மாறி உயிரிழக்கின்றன. எந்த துறைக்கும் இல்லாத தன்னிகரற்ற பல்வேறு சிறப்பு அதிகாரங்கள் உள்ள வனத்துறை உரிய கண்காணிப்பு மற்றும் வாழ் காட்டுதல் இல்லாத ஊழியர்களின் தவறான செயல்பட்டுகளால் தமிழக வனம் மற்றும் வன உயிரினங்கள் அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டுள்ளது.
இவற்றை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய இந்திய வனப்பணி அதிகாரிகள் மத்திய மாநில பணியில் பலர் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வதாகவும் இதனால் பல உண்மைகள் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு வருவதாகவும் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் . மேலும் மத்திய மாநில லஞ்ச ஒழிப்பு துறை , அமலாக்க துறை , வருவாய் புலனாய்வு பிரிவினரும் இதுவரை வனத்துறையினர் மீது கவனம் செலுத்தாதன் விளைவாகவும் இது போன்ற அசாதாரண சூழ்நிலை தமிழக வனத்துறையில் நிலவுவதாகவும் கூறுகின்றனர் .