திருவாரூர் மாவட்டம், திருவாரூர் உட்கோட்டம் திருவாரூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலவங்கார்குடி பகுதியில் பிரபாவதி (வயது-40), க/பெ நாகநாதன் என்பவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
மேற்படி, பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, திருவாரூர் தாலுக்கா காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடம் சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், M.Sc, (Agri)., மர்மமான முறையில் இறந்த பெண்ணின் வீட்டிற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். மோப்பநாய் படை பிரிவினர் மற்றும் கைரேகை பிரிவினர் சோதனை செய்து வருகிறார்கள்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், கைரேகை பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவாரூர் தாலுக்கா காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு வழக்கின் புலன் விசாரணை குறித்தும், மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்