
திண்டுக்கல் முதல் நத்தம் வழியாக கொட்டாம்பட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கோபால்பட்டி, எரமநாயக்கன்பட்டி, சேர்வீடு பிரிவு மற்றும் மெய்யம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள சாலை தடுப்புச்சுவர்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகியுள்ளன. பெரும்பாலான தடுப்பு சுவர்கள் சாலையின் வளைவுகளில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் காலங்களில் விபத்தில்லாமல் மனித உயிர்களை காக்க சாலை தடுப்பு சுவர்களில் மிளிரும் வகையில் ஒளிரும் பட்டைகள் அமைக்க சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.