நத்தம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் – நத்தத்தில் குடியிருப்பு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகள் கிடந்தது – மக்களிடையே பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம், நத்தம், செந்துறை சாலை, R.C.பள்ளி அருகே குடியிருப்பு பகுதியில் 20 மேற்பட்ட நாட்டு வெடிகள் (திருவிழா விற்கு பயன்படுத்தப்படும்) கிடந்தன.நத்தம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று நத்தம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் நாட்டு வெடிகள் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது