திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகள் ஜாலியாக உலா வருவதுடன், அதே பகுதியில் படுத்து ஓய்வெடுக்கின்றன.
சாலையில் மாடுகள் ஓய்வெடுக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், மாடுகள் சாலையில் படுத்து இருப்பதை, அருகில் வரும்போது கவனித்து, அதன்மீது மோதாமல் இருக்க, வாகனத்தை நிறுத்தும்போது தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலைய பகுதியில் மாடுகள் சென்றதால் உரிமையாளர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்
திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை தயங்குவது ஏன்? என்று ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்