திருக்கோவிலூர், ஆக.27- திருக்கோவிலூர் அருகே கோளப்பாறை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நேற்று நடை பெற்றது.
இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில் கோளப்பாறை, திருக் கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர் கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.