மதுபானக் கூடங்களுக்கு கோவை மாநகர காவல் துறை கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவது என்பது சட்ட விரோதமானது மற்றும் பொறுப்பற்ற செயலாகும்.
தங்களது மதுபானக்கூடத்திற்கு மது அருந்த வருவோர் சொந்த வாகனத்தில் வந்தால், டிரைவர் இருப்பதை மதுபானக்கூடம் உறுதிசெய்ய வேண்டும்
மது அருந்த வருவோருக்கு சொந்த டிரைவர் இல்லாத நிலையில், அவர் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தரவேண்டும்
நம்பகமான வாகன ஓட்டுநரை சம்பந்தப்பட்ட மதுபானக்கூடம் ஏற்பாடு செய்து, மது அருந்த வந்தோரின் சொந்த வாகனத்திலேயே அவரை அழைத்துச் சென்று வீட்டில்விட வேண்டும்
அனைத்து மதுபானக்கூடங்களின் உட்புறங்களிலும், வெளிப்புறங்களிலும், வாகனங்கள் நிறுத்தும் இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்
காவல்துறை அறிவுரைகளை மீறும் மதுபானக்கூட நிர்வாகம் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ மற்றும் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.