ஆனால் அது ஒருபுறம் இருக்க தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது, மாஞ்சோலை பகுதி மக்கள் அரசு பணியில் இருந்தவர்கள் அல்ல தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்தவர்கள், மாஞ்சோலை எஸ்டேட் மக்கள் தமிழ்நாடு அரசிடம் நிவாரணம் கேட்கும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் தனியார் நிறுவனத்தில் வேலை இழந்த மக்களுக்கு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத மக்களுக்கு அரசு நிவாரணம் அதற்கு இணையாக கொடுக்க முன் வருமா என்ற கேள்வியும் தற்போது அனைத்து தர மக்களும் முன் வைத்துள்ளனர்..
அதே போல் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 453 ரூபாய் சம்பளம் மற்றும் இலவச கல்வி மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல சலுகைகள் உள்ளது. இன்றளவும் தமிழ்நாட்டில் 100 முதல் 300 ரூபாய் வரை தினசரி சம்பளம் வாங்கும் மக்களும் இருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளரில் பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் சொந்த ஊரில் வீடு நிலம் உள்ளிட்டவை உள்ளனர், வீடு நிலம் இல்லாத மக்களுக்கு மட்டும் அரசு கலைஞர் கனவு திட்டத்தில் அந்த மக்கள் பயன்பெற ஏற்பாடு செய்யலாம்..
மாஞ்சோலை எஸ்டேட் பகுதி மக்களின் சர்ச்சையில் ஒன்றாக இன்றளவும் இருப்பது குளிர் பகுதியில் வாழ்ந்து எங்களால் ஊர் பகுதிகளில் வாழ முடியாது என்றும் தேயிலை தோட்ட வேலையை தவிர வேறு வேலை தெரியாது என்றும் கூறுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர், மாஞ்சோலையை விட மூணார், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, கோதையார் போன்ற பகுதிகளில் வசித்த மக்கள் தமிழகத்தில் அதிகம் வெப்பம் நிலவும் சென்னை, ஈரோடு, மதுரை, திருச்சி, வேலூர், சேலம், தர்மபுரி போன்ற பகுதிகளில் இன்றளவும் வசித்து வருகின்றனர், அதுமட்டுமல்ல தமிழகத்தில் எந்தவொரு மக்களும் ஒரே தொழிலில் இருந்ததில்லை, எதில் லாப நஷ்டம் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் தொழில் மற்றும் வேலையை கற்றுக் கொண்டு மாறுவதும் காலம் காலமாக நடைபெறும் இயல்பு தான்..
வனப்பகுதியில் நிலம் கேட்க அந்த மக்களை தூண்டிவிட்டது புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மட்டுமே.
எனவே மாஞ்சோலை எஸ்டேட் மக்களுக்கு உங்களுக்கு நிவாரண நிதியில் குறைபாடுகள் இருந்தால் அந்த நிறுவனத்தை முறையிட்டு ஆலோசனை நடத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு நீதிமன்ற உத்தரவின் மாஞ்சோலை நாலுமுக்கு ஊத்து காக்காச்சி குதிரவெட்டி எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான மரங்கள், மூங்கில், புற்கள் உள்ளிட்டவை நட்டு வளர்ப்பதற்கு உரிய நிதி வழங்க வேண்டும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மனிதர்கள் காலடி படாத இடமாக விரைவில் அரசு மாற்றும் நம்பிக்கை தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு உள்ளது.
நன்றி வணக்கம் 🙏🏻