கோக்கு மாக்கு
Trending

பழனியில் 1818-ம் நூற்றாண்டில் பாலசமுத்திரம் ஜமீன்தாருக்கு வழங்கிய கிழக்கிந்திய கம்பெனி முத்திரைத்தாள் கண்டறியப்பட்டது

திண்டுக்கல் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த மீனா என்பவர் வீட்டில் இருந்த பழமையான ஆவணம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது

இந்த ஆவணமானது தமிழில் ஈஸ்வர ஆண்டு மாசி மாதம் 9-ம் தேதிக்கும் ஆங்கிலத்தில் 1818ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதிக்குமான பிரிட்டிஷ் கிளர்க் இந்திய கம்பெனியின் முத்திரைத்தாளாகும் இந்த ஆவணமானது ஜமீன்தார் சின்னோபளம்மா சொற்படி எழுதப்பட்டு இறுதியில் அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளது

கடினமான தாளில் உள்ள இந்த பத்திரத்தின் இடது மேல் புறம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வட்ட வடிவமான கட்டணம் முத்தரையானது “இண்டாக்ளியோ” எனப்படும் அச்சு முறையில் இரண்டணா என்று எழுதப்பட்டுள்ளது

மேல் வலது புறத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வட்ட வடிவ கருவூல முத்திரையில் தமிழ் மொழியில் பொக்கிஷம் என்றும் உருது மொழியில் கஜானா என்றும் தெலுங்கில் பொக்கிசமு என்றும் எழுதப்பட்டிருந்தது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button