உடுமலைபேட்டையில் வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் இலங்கை அகதிகள் இருவரை அழைத்து சென்று கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது.
- அருள்ராஜ், செந்தில்குமார்,
ஆகிய இருவரும் இலங்கை அகதியினர்.
இருவரையும் வனக்குற்றம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது அடித்ததை அருள்ராஜ் என்பவர் தனது செல் போனில் படம் பிடித்துள்ளார்.
இதை பார்த்த வனக் காவலர்கள் மூன்று பேர் அருள்ராஜை தனி அறைக்குள் அழைத்து சென்று அடித்து மண்டையை உடைத்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.