சங்கராபுரம் வட்டாரத்தில் மாநில அளவிலான கரும்பு பயிர் மகசூல் போட்டிக்கு பதிவு செய்த கரும்பு வயலை வேளாண்மை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சங்கராபுரம் வட்டம் மஞ்சபுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது வயலில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கோ 86032 என்ற இரகம் மாநில அளவிலான பயிர் மகசூல் போட்டிக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வயலை திருப்பத்துார் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் விஜயராகவன், ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின் கரும்பு அறுவடை நடந்தது. இந்த அறுவடையின் போது சங்கராபரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன், துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி விதை அலுவலர் சிவசங்கர், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் வல்லரசு, விவசாய பிரதிநிதி கணேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.