கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்க்கை கடற்கரையான குளச்சல் கடற்கரை பகுதி தினமும் நூற்றுக்கணக்காக பொது மக்களும், சுற்றுலாபயணி களும் வந்து செல்லும் கடற்கரையாகும் .இங்கு குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து 2018,2019 ஆண்டுகளில் குளச்சல் நகராட்சி துறைமுக பாலம் அருகே சுமார் 3,90,000 ரூபாய் மதிப்பில் சோலார் மின் விளக்கு நிறுவப்பட்டது.
இந்த மின்விளக்கால் இப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பயனடைந்து வந்தனர். ஆனால் இந்த சோலார் மின்விளக்கு தற்போது மாதக்கணக்கில் செயல்படாமல் காணப்படுகிறது. இதனால் கடற்கரை பகுதி இருளில் மூழ்கியுள்ளது. எனவே இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இதனை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும். குளச்சல் நகர
பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட அனைத்து மின் விளக்கு கோபுரங்களையும் சட்ட மன்ற உறுப்பினர் பார்வையிட்டு, பல மாதங்களாக செயல்படாமல் காணப்படும் மின் விளக்குகளை உடனடியாக பழுது பார்த்து இரவு நேரங்களில் பொதுமக்கள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.