திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையச் சரகம் ம.மு.கோவிலுாரைச் சேர்ந்த திரு. முகமது நசுருதீன், த.பெ. முகமது அப்லுல் ஹரீம் என்பவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன்னுடைய இரண்டு மாடுகள் காணாமல் போய்விட்டதாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுத்துள்ளார். இந்த மனு தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் 05.09.2024 ஆம் தேதி 14.00 மணியளவில் திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் மனுதாரர் திரு. முகமது நசுருதீன் மற்றும் அவரது மகன் முகமது உசேன் ஆகியோருடன் விசாரணை மேற்கொண்டுள்ளார். அந்த விசாரணையை மனுதாரரின் மகனான திரு. முகமது உசேன் என்பவர் தன்னுடைய அலைபேசியில் வீடியோ படம் எடுத்துள்ளார். காவல் ஆய்வாளர் ஏன் வீடியோ எடுக்கிறாய் என்று கூறி அவருடைய அலைபேசியை பறிக்க முயன்றபோது மேற்படி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான காவலர் மனுதாரரின் மகனான முகமது உசேனை கையால் தாக்கியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வரப்பெற்றன. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநரை இன்று (06.09.2024) ஆம் தேதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் ஆய்வாளர், திண்டுக்கல் தாலுகா மேற்படி சம்பவத்தை தடுக்க தவறியதாலும் முறையற்ற வகையில் நடந்து கொண்டதாலும் உடனடியாக அவர் பணியிடமாற்றம்
செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது