தற்போது வனத்துறை தனியார் யானை வளர்க்க கடுமையான கட்டுபாடுகளை விதித்து உள்ளது ! இந்நிலையில் திற்பரப்பு பகுதியில் தனியார் வளர்த்தும் யானையை பாகன் திற்பரப்பு அருவி பகுதியில் ஆற்றில் குளிக்க அழைத்து போவது வழக்கம் அவ்வாறு அழைத்து போகும் போது யானையின் உரிமையாளர் திட்டினால் அவர் மீது உள்ள கோபம் காரணமாக யானையை அடித்து துன்புறுத்துவதை பாகன் தொடர்ச்சியாக பல மாதங்களாக செய்து வந்து உள்ளார். யானையை கடுமையாக மறைவான இடத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவது தொடர்ந்து பாகன் செய்து வந்துள்ளார் .
இந்நிலையில் நேற்று பாகன் யானையை அடித்து துன்புறுத்தியதும் ஒரு கட்டத்தில் வலி பொறுக்க முடியாத யானை பாகனின் கையில் இருந்த பிரம்பை பிடுங்கி வைத்து கொண்டது . இதனால் பாகன் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க யானை சாலையில் கண்ணீர் வடிய நின்றது .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நிலை தடுமாறி இரு சக்கர வாகனத்தை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடினார் .
ஆனால் யானை யாரையும் எதுவும் செய்யாமல் சாலையோரத்தில் ஒதுங்கி நின்று வலியால் கண்ணீர் வடித்தது இதனை அங்கே சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் video எடுத்தனர் ! இது சமூக ஊடகங்களில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது ! பிறகு யானையின் உரிமையாளர் வந்து யானையை அழைத்து சென்றார் !