தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார்.
நுரையீரல் தொற்றுக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . தீவிர சிகிச்சை பிரிவில் த.வெள்ளையனுக்கு சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்