கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று ( செப்டம்பர் 9) நடந்தது.
கள்ளக்குறிச்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டனர். இதில் நகர பகுதியில் மட்டும் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று (செப்9) இச்சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோமுகி ஆற்றில் கரைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்த 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு மந்தைவெளிக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில் நடந்த பூஜைகளுக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர்கள் தியாகராஜன், அருண் முன்னிலை வகித்தனர்.
ஹிந்து முன்னணி மாநிலச் செயலாளர ரத்தினகுமார் சிறப்புரையாற்றினார். பின், மேளதாளம் முழங்க நகரின் முக்கிய சாலை வழியாக விஜர்சன ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோமுகி அணைக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, சிறப்பு பூஜை செய்து சிலைகளை விஜர்சனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில