
திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை (களத்துகொட்டம் ) பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கிஷோர் (வயது11) உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பெரியகோட்டடையில் இன்று நடைபெற்ற இறுதிச்சடங்கில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அவர்கள், அன்னாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.