கோக்கு மாக்கு
Trending

மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் :- 17/09/2024

நத்தம் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது, 403 மதுபான பாட்டில்கள், ரூ.6000 பறிமுதல்

திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக புறநகர் டிஎஸ்பி.சிபிசாய் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மனக்காட்டூர் பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பொன்னையா மகன் பாஸ்கரன்(54) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 403 மதுபான பாட்டில்கள், ரூ.6000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு மதுபான கடை வாசல்கள் மற்றும் தனியார் பார் வாசல்களில் வைத்து கள்ளச் சந்தையில் இரட்டிப்பு விலையில் விற்பான நடை பெற்றன .

திண்டுக்கல் பேருந்து நிலையம் MGR சிலை அருகே
பழனி பிஸ்டல் பார்
பழனி கொடைக்கானல் சாலை
பழனி RF ரோடு
பழனி கொடைக்கானல் சாலை

கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மதுவிலக்கு அமலாக்க துறை , காவல் துறை , வருவாய்துறையினர் எங்கு சென்றனர் என தெரியவில்லை என்றும் இவர்களுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்ய இவ்வளவு மது பாட்டில்கள் எப்படி கிடைத்தன அரசு மதுபான கடை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் கடத்தி பதுக்கி வைத்திருந்ததா அல்லது போலி மதுபாட்டில்களை விற்பனை செய்தனரா என்பது சம்மந்தபட்ட துறை அதிகாரிகளுக்கும் கள்ள சந்தை மதுபாட்டில் விற்பனையாளர்களுக்குமே வெளிச்சம் என சமூக ஆர்வலர்கள்கூறி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button