கோக்கு மாக்கு
Trending

300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பிடிபட்டது – மத்திய , மாநில வளத்துறையினர் அதிரடி நடவடிக்கை

   இராமநாதபுரம் மாவட்டம் , இராமேஸ்வரம் அருகில் உள்ள நொச்சிவாடி பகுதியில் இலங்கைக்கு கடத்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவின்  எல்லையோர அலுவலகம் (இராமநாதபுரம்) , தமிழ்நாடு வனத்துறையின் வன குற்ற தடுப்பு பிரிவு (இராமநாதபுரம் ) மற்றும் தமிழக வனத்துறையின் கடலோர உயரடுக்கு படை ( இராமநாதபுரம் ) ஆகியோர் இணைந்து கடந்த சில நாட்களாக இந்த பகுதியை முழுவதும் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ரோந்து பணியின் போது சில மூடைகள் ஓர் இடத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கிடந்ததை பார்த்துள்ளனர் . சந்தேகத்தின் அடிப்படையில் மூடைகளை ஆய்வு செய்ததில் சுமார் 300 கிலோ அளவிலான பிடிக்கவோ / வைத்திருக்கவோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்ததை கண்டறிந்தனர். உடனடியாக அவற்றை கைப்பற்றி சம்மந்தபட்ட வனச்சரகத்தில் ஒப்படைத்துள்ளனர் .

மேலும் இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து இரகசிய விசாரணையிலும் ஈடுபட்டுள்ளதாகவும் வெகு விரைவில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் கைது செய்ய தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button