திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமன் . இவருக்கு சொந்தமான தோட்டம் புதுக்குளம் கரை பகுதியை ஒட்டி அமைத்துள்ளது. இந்த குளத்தில் இரவு நேரங்களில் வன உயிரினங்கள் நீர் அருந்த வருவது வழக்கம் . அப்படி வரும் வன உயிரினங்கள் ராமன் பயிரிட்டுள்ள மக்காசோள பயிர்களை சேதப்படுத்தி வந்ததாகவும் அதற்காக மக்காசோள செடிகளுக்கு இடையே மின்வேலி அமைத்து மோட்டார் மின் இணைப்பில் இருந்து மின்சாரம் எடுத்து திருட்டு மின்சாரம் மூலம் இரவு நேரங்களில் மின்சாரத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் காட்டுமாடு ஒன்று மின்வேலியில் சிக்கி இறந்தது. இதைப்பார்த்த ராமன் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா, செல்வம் ஆகியோரின் உதவியுடன் காட்டு மாடு இறந்த இடத்திலேயே குழி தோண்டி புதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த இரகசிய தகவல் வனத்துறையினருக்கு கிடைத்ததனை அடுத்து மாவட்ட வன அதிகாரி ராஜ்குமார் IFS , மாவட்ட வன பாதுகாப்பு படை உதவி வன பாதுகாவலர் நிர்மலா ஆகியோர் முன்னிலையில் சிறுமலை வனச்சரகர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து JCP மூலம் புதைக்கப்பட்ட காட்டுமாட்டை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து அதே இடத்தில் புதைத்தனர்.
இந்த வனக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட கருப்பையா கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்ற இருவரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
ம