சங்கராபுரம் வட்டத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சீரத்துன் நபி(ஸல்) மற்றும் மது ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையம் திப்பு சுல்தான் திடலில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பாக, தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நடத்தும் மாபெரும் “ஸுரத்துன் நபி (ஸல்)” மற்றும் “மது ஒழிப்பு மாநாடு” கள்ளக்குறிச்சி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஆர்.எம் அல்தாப் உசேன் (தாவூதி ஃபாஜில்) அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து பள்ளிவாசல் உலமாக்கள், முத்த வல்லிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக மாலை 4.00 மணி அளவில் சங்கராபுரம் யூனியன் ஆபீஸில் இருந்து பேருந்து நிலையம் வரை “மது ஒழிப்பு மாநாடு” பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு பேச்சாளர்களாக சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த தலைமை இமாம் ஹஜரத் ஏ. வி. அபூபக்கர் அவர்களும், தர்மபுரி தாருல் உலூம் முதல்வர் ஹஜரத் ஏ. ஷாரியாஸ் அவர்களும் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டனர்.