செங்கோட்டை நகராட்சியில் காந்தி ஜெயந்தி மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் 10 ஆவது ஆண்டு துவக்க விழாவினை ஒட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல் மற்றும் நகர் முழுவதும் 5000 பண விதைகள் நடவு செய்யும் பணி துவக்க விழா நடைபெற்றது.
நகர் மன்ற தலைவர் திருமதி ராமலட்சுமி , நகராட்சி ஆணையாளர் திரு சாம் கிங்ஸ்டன் அவர்களது முன்னிலையில் காதி கிராப் காந்தி கதர் கிராம தொழில் வளர்ச்சி நிறுவன த்தைச் சார்ந்த பலர் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் திரளாக கலந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இந்நிகழ்வில் அனைத்து நகராட்சி பணியாளர்கள் பரப்புரையாளர்கள் தொண்டு நிறுவனத்தார் மாணவ மாணவியர் கல்லூரி மாணவிகள் தன்னார்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பனைமரம் நடும் நிகழ்வில் தங்களது பங்களிப்பை ஆற்றினார்கள்.
நிலைத்த நீடித்த விவசாயம் நிலத்தடி நீர் சேகரிப்பு மற்றும் மண் அரிமான தடுப்பு ஆகியவற்றின் காக இந்த பணம் விதை விதைகள் ஆறு , குளம் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் பூங்காவின் சுற்றுச்சூழல் மேம்படுத்தும் பொருட்டு பனை விதைகள் , மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது முடிவில் சுகாதார ஆய்வாளர் திரு ரங்கராஜ் அனைவருக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.