திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் நகர் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகல் நகர் ரவுண்டானா பகுதி திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதியை கடக்காமல் நத்தம் , காரைக்குடி போன்ற ஊர்களுக்கு திண்டுக்கல் வழியாக செல்லும் எந்த வாகனமும் செல்ல முடியாது .
இந்த ரவுண்டானவுக்கு மிகு அருகிலேயே பல ஆயிரம் மாணவிகள் படிக்கும் பள்ளி கூடம் உள்ளது . இரயில் நிலையம் மற்றும் பல்வேறு முக்கிய பள்ளிகள் , கல்லூரிகளுக்கு இந்த ரவுண்டானாவை கடந்து மட்டுமே செல்லும் நிலை உள்ளது .
இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக வாகன நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் , பள்ளி கல்லூரி மாணவர்கள் ,வேலைக்கு செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகி பயணிப்பது வாடிக்கையாக உள்ளது .
இரண்டு காவல் நிலைய எல்லையில் இருக்கும் இந்த இடத்தை இரண்டு காவல் நிலைய அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை . போக்குவரத்து போலீஸாரும் பெயரளவில் கடமையாற்றுகின்றனர் . வாகன சோதனைக்கு மட்டும் கூட்டமாக வந்து இந்த இடத்தில் நிற்கும் காவல் துறையினர் கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் போக்குவரத்தை சரி செய்ய வருவதில்லை என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த நாகல்நகர் ரவுண்டானா உட்பட திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் நவீன சிக்கல்கள் பல லட்ச ரூபாய்கள் செலவு செய்து அமைக்கப்பட்டும் அவை காட்சி பொருளாக மட்டுமே இருந்து வருகிறது .
தினமும் காலை மாலை வேளைகளில் இப்படி கூட்ட நெரிசலில் சிக்கி அவதிபடுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு தாமதமாக செல்வது வாடிக்கையாக உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் இந்த பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி நேரடியாக தலையிட்டு நிரந்திர தீர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.