
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயப்பாளையம் ஏரியானது மழை நீரால் நிரம்பியுள்ளது. இந்த ஏரியில் இன்று (அக்.,15) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் மதுசூதன் ரெட்டி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மதுசூதன் ரெட்டி ஆட்சியரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.