கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணி புரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்பதைக் குறிக்கும் விதமாகவும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் முன்னாள் முதல்வர் “கலைஞர் போட்டோவாலேயே” முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் படத்தை வரைந்தார்.
பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில்:- 13 ஆண்டு காலமாக தற்காலிகமாக அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, கட்டடக்கலை, தோட்டக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களில் பணிபுரிகின்ற 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்துக்கு பணி புரிந்து வருவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது,
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டியும். நாட்டு மக்களுக்கு செய்து வரும் பணிகள் சிறப்பானது அவருடைய தந்தை முன்னாள் முதல்வர் “கலைஞரின் வழியில் முதல்வர் மு. க. ஸ்டாலின்” என்பதை குறிக்கும் விதமாகவும் கலைஞர் போட்டோவை நீர் வண்ணத்தில் தொட்டு “கலைஞர் போட்டோவாலேயே” முதல்வர் ஸ்டாலின் படத்தை ஐந்து நிமிடத்தில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.