இயற்கை ஆர்வலர் சாதிக் பயணம்.! காடுகளின் வழியாக மலையேற்றம் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு இந்த வணிகச் செயல்பாடுகள் இடையூறு விளைவிக்கும் என புகார் நம் முன்னோர்கள் இயற்கையுடன் ஒன்றாக இணைந்து வாழ்ந்தார்கள். காலப்போக்கில் நாம் அதனை மறந்துவிட்டோம். விளைவு சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு.
இனி வரும் காலங்களில் இது தொடர்ந்தால் நம்முடைய இயற்கை வளங்களை முற்றிலும் அழித்துவிடும். ஒரு குறிப்பிட்ட தலைமுறையினர் அதனை அழித்தாலும், அதை மீண்டும் மீட்டெடுக்க வேண்டும் என்ற வேட்கையுடன் பலர் இயற்கை அன்னையை காக்க களம் இறங்கி உள்ளனர்.
இந்த நிலையில் உதகையில் இயற்கை ஆர்வலரும் வன விலங்குகள் ஆர்வலருமான சாதிக் இன்று காலை இயற்கையை காப்போம் என்ற முழக்கத்துடன் இரண்டு சக்ரவாகனத்தில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.
விழிப்புணர்வுை பயணம் உதகையில் தொடங்கி தெலுங்கானா,உத்ரபிரதேசம்,உத்ரகாண்ட்,நேபாளம்,சிக்கிம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று மீண்டும் உதகையில் முடிவடைகிறது . அப்போது பேசிய அவர் தமிழ்நாடு வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவக் கழகம் ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் உள்ள காடுகளின் வழியாக மலையேற்றத்தை ஏற்பாடு செய்ய உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக பத்து பாதைகள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வனவிலங்குகளுக்கு இந்த வணிகச் செயல்பாடுகள் இடையூறு விளைவிக்கும் மாணவ மாணவிகள் உயர் படிப்புக்கு தேவை எனில் மலை ஏற்றத்தை அனுமதிக்கலாம் ஆனால் வணிகரீதியான செயல்பாடுகளை அனுமதிக்க கூடாது என கூறினார்.