கோக்கு மாக்கு
Trending

செங்கோட்டை நகராட்சி பகுதிகுட்பட்ட இந்தியா திட்ட அமலாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அறிவிப்பானை

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், செங்கோட்டை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் அரசாணை (நிலை) எண் 183 நாள் 31.12.2022 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்புகள், சென்னை பெருநகர பகுதி கழிவு மேலாண்மை (ஒழுங்குமுறை) விதிகள்-2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறை படியும் அனைத்து கழிவுநீர் வாகனங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து உரிமம் பெறப்பட்டுள்ளது. மேலும் அதனை செயல்படுத்தும் வகையில் 14420 கட்டணமில்லா தொலைபேசி எண் கழிவுநீர் மேலாண்மை குழு (மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அளவில் ) அமைக்கப்பட்டு 100 சதவிகிதம் திறந்த வெளியில் மலம் கழித்தல் (Open Defecation Free ++) சிறுநீர் கழித்தல் இல்லாத நகராட்சியாக மற்றும் பாதுகாப்பான முறையில் கசடு கழிவுகள் மேலாண்மை செயல்பட்டு வருவது தொடர்பான சுய பிரகடனம் செய்ய மன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதே போல் வீட்டுவசதி மற்றம் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் (MoUHA) கீழ் துாய்மை இந்தியா திட்டம் (நகரம்) 2.0 திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடுகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குப்பையில்லா நகரம் (GARBAGE-FREE CITY) தொடர்பான தரச்சான்று (GARBAGE FREE CITY – 1 STAR / 3 STAR / 5 STAR / 7 STAR ) வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கோட்டை நகராட்சியில் சேகரமாகும் திட மற்றும் திரவக் கழிவுகளை உரிய திட மற்றும் திரவக்கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி, முறையே தரம் பிரித்து, சேகரிக்கப்பட்டு மற்றும் கழிவு செயலாக்க மையங்களின் மூலம் உரிய அறிவியல் ரீதியான முறையில் செயலாக்கம் செய்யப்படுகிறது. ஏனவே, செங்கோட்டை நகராட்சியினை குப்பை இல்லா நகரம் (GARBAGE FREE CITY) தொடர்பான தரச்சான்று மூன்று நட்சத்திர அங்கீகாரம் (THREE STAR RATING) பெற மன்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏனவே, இந்நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் இப்பொருள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் இருப்பின் ஆணையாளர், செங்கோட்டை நகராட்சி அவர்களுக்கு எழுத்துவாயிலாக இவ்வறிவிப்பு வெளியிடப்பட்ட 15 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என நகராட்சி சார்பாக அறிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button