
குமரி மாவட்டத்தில் தற்போது பல வட மாநில இளைஞர்கள் வயலில் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செண்பகராமன் புதூர், கண்ணன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் நாற்று நடவு பணி செய்து வருகின்றனர். 4.75 சென்ட் பரப்பளவில் நாற்று நடவு செய்வதற்கு ரூ.240 கூலியாக வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நாற்று நடவுக்கு கூலியாக ரூ.5 ஆயிரம் பெற்று வருகின்றனர்.
வடமாநிலத்தில் போதிய வேலை இன்மை மற்றும் சம்பளம் குறைவால் வட மாநிலங்களில் இருந்து கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை மையப்ப டுத்தி வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் இங்கு வந்து கூலி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்…