திண்டுக்கல், வேடசந்தூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் SP.தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது சுள்ளெறும்பு அண்ணாநகர் பகுதியில் உள்ள தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய தர்மராஜ், செல்லமுத்து, ராஜேஷ், சிவராஜ், கண்ணன் உட்பட 10 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.52,500 பணம் மற்றும் 7 டூவீலர்களை பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்